Monday, July 26, 2010

தனிமையில் நான்

தனிமையில் நான் 

வீதி விளக்கு மின்னுகிறது 
இரவு நேரம் 
சுழன்று அடிக்கிறது குளிர் காற்று 
ஆனால், என் இதயம் மட்டும் எரிகிறது 

எதனால் கண் கலங்கினாய் ?
எதனால் பிரிந்தாய் ?
கடல்கரையில் காலாற நடை போடவந்தோம்
கனவிலும் நினைகாதவாறு விடை பெற அல்ல 

நீ சொன்ன வார்த்தை 
என்னை நிறுத்தி விட்டது தனிமையில் 
குமுறுகிறது என் இதயம் - காரணம் 
என் இதயம் குற்றமற்றது

என்னை விட்டு விடு , பிரிந்து விடு 
என்று சொன்னாய் - ஆனால் 
உன் வார்த்தையில் இரண்டாகிய 
இதயத்தை ஒட்டாமல் சென்று விட்டாய் 

வாடுது மனம் தனிமையில் 
வாட்டுது உன் நினைவுகலில்...............................

                              ---- DDR ----

இக் கவிதை தனேஷ் பிரியன் என்பவர் 
விரும்பி கேட்ட தலைப்பில் தரப்படுகிறது ......




தனிமையில் நான்

    தனிமையில் நான்   
                       
என்னுடன் நடந்த - என் 
நிழல் இல்லை என்னுடன் 
எனக்காய் துடித்த - என் 
இதயம் இல்லை என்னுடன் 
என்னில் வாழ்ந்த - என் 
உயிர் இல்லை என்னுடன் 
பெண்ணே !

உன்னை பார்த்த நாள் முதல் - என் 
உடன் பிறந்த உயிர் - என் 
உடன் நடந்த நிழல் - என் 
உடன் துடித்த இதயம் - உன் 
பின்னே வந்ததை என்னென்று சொல்ல 

அவையெல்லாம் உன்னுடன் செல்ல 
காதல் சிறையில் தனிமையில் நான் 
துடிக்கிறேன் - பெண்ணே !
உன் காதல் வார்த்தைக்காய்






Saturday, July 24, 2010

உனக்காய் துடிக்கின்றது

உனக்காய் துடிக்கின்றது 

உன்னை பார்த்த கண்கள் 
உறங்கி விட்டன
எதிர் பார்த்ததில் சோர்வடைந்து 

உன் பெயரை மட்டும் உச்சரித்த இதழ்கள் 
மௌனித்து விட்டன 
உன் பெயரை உச்சரித்ததில் சோர்வடைந்து 

உன்னை தேடி வந்த கால்கள் 
ஓய்ந்து விட்டன 
உனக்காய் ஓடியதில் சோர்வடைந்து 

ஆனால் !
உனக்காய் காத்திருக்கும் - என் 
இதயம் மட்டும் இன்னும் 
ஓயாமல் துடிக்கிறது 
                      உனக்காக  - உன் வரவுக்காக........




கண்ணம்மா

கண்ணம்மா 

கஞ்சி கொண்டு போறாளே கண்ணம்மா 
கஞ்சி சட்டியில் இருப்பது என் உசுரம்மா 

என் உசுரு ஒன்னும் பெருசு இல்ல 
பிடிங்கி கொண்டு போ 
ஆனால், என் மனதுக்காக சொல்லி விடு 
அந்த மூணு வார்த்த 

உன் கையால் தரும் கஞ்சி ருசிக்கும் 
கடிக்க தரும் மிளகாய் உறைக்கும்
நீ தரும் புன்னகை இனிக்கும் 
ஆனால், உன் மௌனம் மட்டும் வாட்டுதம்மா

மூடி மறைக்காத மனசை 
உன்னால் நான் மூடி போவேன் மண்ணுல
மனச தொறந்து விடு - இல்ல 
விஷம் எடுத்து தந்து விடு 

ஆனால் பாவம் !
விஷம் கூட உன் கை பட்டு 
தேனாக இனிக்குதடி 
கண்ணம்மா ....................................

    இக் கவிதை DDR இன் முதல் கிராமியசாயலில்         
    எழுந்த கவிதை ................................
                           இப்படிக்கு உங்கள் DDR 



Thursday, July 22, 2010

முத்தமழை 

மேகங்கள் கொண்ட காதலால் 
பெய்தது அடைமழை - நம் 
தேகங்கள் கொண்ட காதலால் 
பெய்கிறது அன்பு மழை 
காதலால் ஏற்படும் மோகத்தால் 
பெய்யட்டும் முத்த மழை




Wednesday, July 21, 2010

சத்தம் உன் சத்தம் 

மௌனத்தின் வாசலில் - உன் வருகைதான் 
 இடி சத்தமாய் 
இதயத்தின் வாசலில் - உன் வருகைதான்  
  மேள சத்தமாய்
என் கனவு வாசலில் - உன் வருகைதான்  
     வெடி சத்தமாய் 
என் காதல் வாசலில் - உன் வருகைதான்  
     முத்த சத்தமாய்  






Monday, July 19, 2010

என்னவள் !

பல கோடி விண்மீன்கள் 
வானில் தோன்றினாலும் - நம்
உள்ளத்தை கவர்ந்ததென்னவோ ?
பௌர்ணமி நிலவொன்றுதான்
அதைபோல.......................

பல கோடி பெண்கள் - என் 
வாழ்வில் தோன்றினாலும் - என் 
உள்ளத்தை கவர்ந்தவளேன்னவோ ?
பௌர்ணமி நிலவான நீதான் பெண்ணே .......


Sunday, July 18, 2010

காதல் ஓவியம் 

உன் மௌனிக்காத வார்த்தைகளால் 
என் மனதை ஒரு நிமிடம் 
உன் மனதென்று கூறி
கூரிய ஆயுதத்தால் பதம் பார்த்தாயே !
தினம் தினம் உன் வருகைக்காய் 
என் விழி வழி மேல் 
சந்தம் தீட்ட நினைக்கிறது.
 
உன் பளிங்கான முகம் - எனக்கு 
முத்தமிழால் பரிந்துரைத்த 
காவியம் - உன்னை 
தினம் என் மனதில் வைத்து 
ஓவியமாய் தீட்ட நினைகிறேன்
அந்த வேளையில் - என் 
மனதில் குடி கொள்வாயா ?





Saturday, July 17, 2010

மரண ஏடு 

என் வாழ்க்கை எனும் புத்தகத்தில் 
பலர் திருப்பி சென்றனர் 
அதில் பல ஏடுகளை 

என் தாய் சிலவற்றை திருப்பினாள்
என் தந்தை சிலவற்றை திருப்பினார் 
என் உடன் பிறப்புகளும் சிலவற்றை திருப்பின
என் உறவினர்கள் சிலவற்றை திருப்பினர் 

என் ஆசான் சிலவற்றை திருப்பினார் 
என் நண்பர்கள் சிலவற்றை திருப்பினர் 
என் மனைவி சிலவற்றை திருப்பினாள் 
காற்றும் சிலவற்றை திருப்பியது 

இதில் எந்த ஏட்டிலும் இல்லாத அமைதி 
எமன் திருப்பிய என் மரண ஏட்டில்



Friday, July 16, 2010

வழி தாங்கும் இதயம் 

சிற்பியான் ஒருவன் 
சிலை செதுக்க எண்ணினான் 
அங்கே இரு கல் இருந்தனவே 
ஒன்றை தெரிவு செய்தான் சிலைக்கென 

தன் கற்பனை எண்ணத்தில் 
உளி வைத்தான் கல்லின் தலையில் 
ஆச்சரியம் ! அதிசயம் !
கல் அழுது கரைந்ததுவே 

வலிதாங்கா நெஞ்சமது 
கல்லாய் வந்தது போல்
வலிதாங்க மாட்டேன் - என்றது 
சிற்பியும் ஒதுக்கி வைத்தான் 

பிறிதொரு கல்லை தேர்ந்தெடுத்தான் 
தன் கற்பனை எண்ணத்தில் உளி வைத்தான் 
அது பேசவில்லை, அழவில்லை
அழகிய சிலை அமைத்தான் - அம்மனாய்

அச்சிலையும் சென்றதம்மா 
ஆலய மூலஸ்தான கடவுளாய் 
வெறுங்கல்லும் வாடுதம்மா 
தேங்காய் உடைக்கும் கல்லாய் 

வலி தாங்கும் நெஞ்சங்கள் 
போனதில்லை பாழாய் 
வலி தாங்க நெஞ்சங்கள் 
ஆனதில்லை பாலாய்

உன் வாழ்வில் விழும் ஒவ்வொரு அடியும் 
நீ எடுத்து வைக்கும்  ஒவ்வொரு படி 
அடி தாங்கி பழி தாங்கி வாழ்ந்துவிடு முன்னே 
உன்னை ஊர் போற்றி  வாழ்ந்து வரும் பின்னே



Thursday, July 15, 2010

மௌனச்சிறை....................................

உன்னை பார்த்த பரவசத்தில் 
சுக்குநூறாய் உடைத்த என் மனம் 
உன் கால் தடம் பதிந்த மண்ணில் 
ஒளிந்து கொண்டது 
உன்னை தேடி வருகிறேன் 
என்மனதை பெற்றேக அல்ல 
உன் இதயத்தை பெற்றேக
பெண்ணே !
உன் மௌன சிறையில் 
நம் காதலை சிறையடைத்து 
என் சாதலை முடிவாக்கிவிடாதே
நம் காதல் வரலாறு
நீண்ட நாள் நீடிக்கட்டும்



எதை கொண்டுதான் தடுப்பதோ.................?

விளக்கினை நாடி வந்து - வினையை
தேடி கொள்ளும் விட்டிலை - நானும் 
உன்னில் என்னை இழந்து
உருகி தவிக்கின்றேன்
பிறவி செய்த பிழைதான் - நானும்
உன்னை கண்டது என்றால்
உன்னில் என்னை இழந்தது மட்டும்
எப்படி என் குற்றம் உயிரே !
இந்த வழி அன்றே தெரிந்திருந்தால்  
நான் தொலைந்திருப்பேனா 
தெரிந்தே இருந்தாலும் ஒதுங்கிதான் இருப்பேனா 
அந்த வழி தெரிய நியாயம் இல்லை என்பதை விட 
தெரிந்திருந்தாலும்...........................................
அணை மீறிய வெள்ளம் போல் 
எனை மீறிய என் காதலை 
எதை கொண்டுதான் தடுப்பதோ.................?




மறக்கதெரியவில்லை................!

அவளை மறந்தேன் மறந்தேன் 
என்று எண்ணியே - அவளை 
மறக்க முடியவில்லை
அவள் என்னோடு இல்லை என்றாலும் 
அவள் நினைவுகள் மட்டும் - என் 
இதய அறையில் - எங்கேயோ 
ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது




Wednesday, July 14, 2010

என்னவள் 
சில பெண்கள் அறிவால் மட்டுமே வியக்க வைப்பர் 
சில பெண்கள் அழகால் மட்டுமே வியக்க வைப்பர் 
என்னவளோ !
அறிவாலும் நயமான அழகாலும் பிரமிக்க வைக்கும் 
பிரம்மனின் போதை கலவை.............................. 





          காதல்
 
உன்னோடு பேசித்திரிந்த காலத்தில் 
இதயத்தில் காதல் இல்லை பெண்ணே ! 
உன்னை காதலிக்கின்ற போது
என் இதயத்தில் வார்த்தைகளேதும் இல்லை 
உன் நாமத்தை தவிர...............






 மௌனம் 

உன் உதடுகளின் காதல் பிரியக்கூடாது 
என்பதற்காகவா- என் காதலுக்கு  
மௌனத்தை மட்டும் காட்டுகிறாய்






Tuesday, July 13, 2010

கல்லறையில் பூ

காதலித்து என்னக்காய்
மலர்செண்டுதான் தரவில்லை
என் உயிரே
உன்னை நேசித்ததற்காக
என் கல்லறையில்
மலர் வலயமாவது வைத்துவிடு
நீ நிறைந்து இருக்கும்
என் இதயமாவது
திருப்தி அடையட்டும்




சலங்கை சத்தம்


நான் அமைதியாக நடக்கையில்

உன் மௌனங்களை எல்லாம்

மொழி பெயர்த்து கூறுகிறது

உன் சலங்கை சத்தம்




               

கருத்துகளை வரவேற்கிறோம் .......................................................................

Monday, July 12, 2010

Vamanan - oru devathai HQ (surya)

EditingMySpace.com - Angels

இந்த தேவதைக்காக ஒரு பாடல் மேலே
                          முன்னுரை
நெருப்பிலும் நீர் வலியது 
நீரிலும் காற்று வலியது 
காற்றிலும் கண்ணீர் வலியது 
ஆனால்,
கண்ணீரிலும் வலியது கவிதைகள் 

கவிதைகள் கண்ணீரை துடைக்கும் 
கவிதைகள் துயரம் துடைக்கும்

இவ்வாறு கண்ணீரை கண்டு 
கரைந்து போன உள்ளமும் 
துயரத்தை கண்டு 
துவண்டு போன நெஞ்சமுமே 
இக்கவிதை தொகுப்பின் 
முதல் பொறி 
இக்கவிதைகள் என் நெஞ்சத்தில் 
எழுந்த எண்ணங்களின் தொகுப்பு 
இது ரசிப்பவருக்கு கவிதை 
வெறுப்பவருக்கு கலங்கல் நீர் 
நீங்கள் ரசிப்பதுதான் 
நான் செய்த பாக்கியம் 
நம்பிக்கைகளோடு 
என் முன்னுரைக்கு முற்றுப்புள்ளி.

                            என்றும் உணர்வுகளோடு 
                                      எஸ். கமலநாதன் 

Friday, July 9, 2010

முஸ்தபா முஸ்தபா பாடல் இம்முறை பிரியும் எனது நண்பர்கள் dark charges குழுவினரிட்கு இதனை சமர்பிக்கிறேன்...........................................................

mustafa mustafa

mustafa mustafa

Mustafa Mustafa - Kadhal Desam - A.R.Rahman (HD)

உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்...................................
                   அத்துடன் எமது பேஸ்புக் பகுதியான கமலின் கவிதைகள் பகுதியையும் பாருங்கள்.

Kadhal Desam - Ennai Kaanavilaiyeh

Santhana Tentralai - Kandu kondain-Ajith song

Vinnaithandi Varuvaya Video Songs-VTV HD Hosanna HD

Thursday, July 8, 2010

try it
send comments

Tuesday, July 6, 2010

my first video
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3