Friday, July 16, 2010

வழி தாங்கும் இதயம் 

சிற்பியான் ஒருவன் 
சிலை செதுக்க எண்ணினான் 
அங்கே இரு கல் இருந்தனவே 
ஒன்றை தெரிவு செய்தான் சிலைக்கென 

தன் கற்பனை எண்ணத்தில் 
உளி வைத்தான் கல்லின் தலையில் 
ஆச்சரியம் ! அதிசயம் !
கல் அழுது கரைந்ததுவே 

வலிதாங்கா நெஞ்சமது 
கல்லாய் வந்தது போல்
வலிதாங்க மாட்டேன் - என்றது 
சிற்பியும் ஒதுக்கி வைத்தான் 

பிறிதொரு கல்லை தேர்ந்தெடுத்தான் 
தன் கற்பனை எண்ணத்தில் உளி வைத்தான் 
அது பேசவில்லை, அழவில்லை
அழகிய சிலை அமைத்தான் - அம்மனாய்

அச்சிலையும் சென்றதம்மா 
ஆலய மூலஸ்தான கடவுளாய் 
வெறுங்கல்லும் வாடுதம்மா 
தேங்காய் உடைக்கும் கல்லாய் 

வலி தாங்கும் நெஞ்சங்கள் 
போனதில்லை பாழாய் 
வலி தாங்க நெஞ்சங்கள் 
ஆனதில்லை பாலாய்

உன் வாழ்வில் விழும் ஒவ்வொரு அடியும் 
நீ எடுத்து வைக்கும்  ஒவ்வொரு படி 
அடி தாங்கி பழி தாங்கி வாழ்ந்துவிடு முன்னே 
உன்னை ஊர் போற்றி  வாழ்ந்து வரும் பின்னே



Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3