Friday, March 4, 2011

ஆராரிராரோ நான் இங்கு பாட

ஆராரிராரோ நான் இங்கு பாட 

ஆராரிராரோ நான் இங்கு பாட 
தாயே நீ கண்ணுறங்கு என்னுடன் மடி சாய்ந்து 

ஆராரிராரோ நான் இங்கு பாட 
தாயே நீ கண்ணுறங்கு என்னுடன் மடி சாய்ந்து 

வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்கமே 
வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே 
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே


ஆராரிராரோ நான் இங்கு பாட 
தாயே நீ கண்ணுறங்கு என்னுடன் மடி சாய்ந்து 

வேரில்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே 
ஊர் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிரே நோக துடித்தாயே 
உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே 
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே 
உனக்கே ஒரு தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்   

ஆராரிராரோ நான் இங்கு பாட 
தாயே நீ கண்ணுறங்கு என்னுடன் மடி சாய்ந்து 

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்கின்ற மருந்தல்லவா 
மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காது உயிர் அல்லவா 
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ 
சுழல்கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ 
இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற  

ஆராரிராரோ நான் இங்கு பாட 
தாயே நீ கண்ணுறங்கு என்னுடன் மடி சாய்ந்து 






வாசகர்களே !
 இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் .........
அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 

Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3