Tuesday, March 15, 2011

மண்ணில் இந்த காதலன்றி

மண்ணில் இந்த காதலன்றி

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ 
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ 
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா ............

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ 
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ 
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா ............

வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணை இன்றி 
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயின் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும் 
சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும் 
கன்னிமகள் அருகில் இருந்தால் சுவைக்கும் 
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும் 
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில் 
அதிசய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிதுதான் 

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ 
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ 
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா ............

முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவளமும் 
கொத்து மலர் அற்புதங்களும் குவிந்த அகரமும் 
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும் 
சுற்றிவர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும் 
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி 
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி 
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும் 
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவளல்லவா 

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ 
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ 
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா ............

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ 
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ 

வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 
ad1

ad2

ad3