Saturday, March 12, 2011

ஒருவன் ஒருவன் முதலாளி

ஒருவன் ஒருவன் முதலாளி


ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி 

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி 

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு ?
பூ பறிக்க கோடரி எதற்கு ?
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ?
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு 

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 
விதியை நினைப்பவன் ஏமாளி

அதை வென்று முடிப்பவன் அறிவாளி 



மண்ணின் மீது மனிதனுக்காசை  
மனிதன் மீது மண்ணுக்காசை 
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது 
இதை மனம்தான் உணர மறுக்கிறது 
உன் கையில் கொஞ்சம் காசு இருந்தால் 
நீ தான் அதற்கு எஜமானம் 
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் 
அதுதான் உனக்கு எஜமானம் 
வாழ்வின் அர்த்தம் புரிந்து விடு 
வாழ்கையை வாரி குளித்து விடு 



ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி 

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு ?
பூ பறிக்க கோடரி எதற்கு ?
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ?
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு 

வானம் உனக்கு பூமியும் உனக்கு 
வரம்புகளோடு சண்டை எதற்கு 
வாழ சொல்லுது இயற்கையடா 
வாழ்வில் துன்பம் செயற்கையடா 
பறவைகள் என்னை பார்க்கும் போது நலமா நலமா என்கிறதே 
மொட்டுக்கள் கூட திறக்கும் போது முத்து முத்து என்கிறதே 
இனிமை இனிமேல் போகாது 
அட முதுமை எனக்கு வாராது 

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி 

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு ?
பூ பறிக்க கோடரி எதற்கு ?
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ?
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு 






வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3