Wednesday, February 9, 2011

சொல்லாமல் தொட்டு செல்லும்

சொல்லாமல் தொட்டு செல்லும்


சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் 
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் 
ஒரு நாளுக்குள்ளே மெல்ல மெல்ல 
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல 
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதமானேன்



சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல்
தேவதையின் கண்கள் நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்


ஓ ....காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா 
நெருப்பை விழுங்கிவிட்டேன் ஓ..........அமிலம் அருந்திவிட்டேன் 
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய் 
வாலிபத்தின் சொல்லையிலே ரகசியமாய் பூ பறித்தவள் நீதானே 



சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் 
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல்


பெண்களின் உள்ளம் படுகுழி என்பேன் விழுந்து எழுந்தவன் யார் 
ஆழம் அளந்தவன் யார் ஓ .....கரையை கடந்தவன் யார் 
காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை 
மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன் தான் அலைவான் வீதியிலே 



சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் 
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் 
ஒரு நாளுக்குள்ளே மெல்ல மெல்ல 
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல 
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதமானேன்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் 
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் 






இந்த பாடல் காதலர் தின சிறப்பு பாடல் ...........................
நீங்கள் கேட்க விரும்பும் பாடல்களையும் கூறுங்கள் ..............................................
உங்கள் 

Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3