Sunday, February 20, 2011

பொய் சொல்ல கூடாது காதலி

பொய் சொல்ல கூடாது காதலி

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய் 
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் 
பொய் ஒன்றை ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய் 
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 
அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன் 
அதை ரகசியமாக உயிரை தோண்டி 
பதியம் போட்டு கொண்டேன் 
கண்டவுடன் எனையே தின்றதடி விழியே 
என்னை விட்டு தனியே சென்றதடி நிழலே 
அடி சுட்டும் விழி சுடரே நட்சதிரப் பயிரே 
ரெக்கை கட்டி வா நிலவே 

பொய் ஒன்றை ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய் 
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 

ஒரு மழை என்பது ஒரு துளி தானா கண்ணே  
நீ ஒற்றை துளியா கோடி கடலா 
உண்மை சொல்லடி பெண்ணே  
கன்னக்குழி  நடுவே சிக்கிக்கொண்டேன் அழகே    
நெற்றி முடி வழியே தப்பி வந்தேன் வெளியே 
அடி பொத்தி வைத்த புயலே 
தத்தளிக்கும் திமிரே வெட்கம் விட்டு வா வெளியே 

நில் என்று கண்டித்தாய் உள்ள சென்று தண்டித்தாய் 
சொல் என்று கெஞ்சத்தான் சொல்லாமல் வஞ்சித்தாய்  

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய் 
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் 
பொய் ஒன்றை ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய் 
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்




என்னுடைய இவ் வலை தளத்திற்கு வருமானம் ஈட்டும் முகமாக விளம்பரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன ............
நீங்கள் விரும்பினால் அவ் விளம்பரங்களில் click செய்வதன் மூலம் நான் சிறு அளவான வருமானம் ஈட்ட முடியும் ......................
அது உங்கள் விருப்பம் , அத்துடன் எனது வழியை பார்பவர்கள் தங்கள் கருத்துக்களை விட்டு செல்லுங்கள் ...................


உங்கள்  


Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3