Saturday, April 16, 2011

காற்றே என் வாசல் வந்தாய்

காற்றே என் வாசல் வந்தாய்

ஆண் :- காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் 
                  காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் 
                  நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் 
                  சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் 
                  துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
                  நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு 
                 துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
                 
பெண் :-  காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் 

ஆண் :-  கார்காலம் மழைக்கும் போது ஒளிந்து கொள்ள நீ வேண்டும் 
                  தாவணி குடை பிடிப்பாயா 
பெண்:-  அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் 
                 கண்களில் இடம் கொடுப்பாயா 
ஆண்:-  நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
                நீ உன் மனதில் என் உருவம் கண்டுபிடிப்பாயா 
பெண்:- பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க 
                பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க 
ஆண்:-  பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க 

ஆண் :- காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் 
                  காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் 

பெண் :-  நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் 
                 சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் 

பெண் :- நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்து போல் 
                 என் பெண்மை திரண்டு நிற்கிறதே 
ஆண் :- திறக்காத் சிப்பி என்னை திறந்து கொள்ள சொல்கிறதா 
                என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே 
பெண் :- நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் 
                 உன் வருகையினால் வயதறின்தேன்
                 என்னை மறுபடியும் சிறுபிள்ளையாய் செய்வாயா 
ஆண் :- கட்டலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா 
                 கட்டலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா 
பெண் :- கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா 

ஆண் :- காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக
பெண் :- காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் 

பெண் :- துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
                   நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு 
                  துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
                 துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 

கேட்க...................

பார்க்க....................

திரைபடத்தை பார்க்க .............

பாடலை பதிவிறக்க........

click .......

வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 
ad1

ad2

ad3