Wednesday, April 20, 2011

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது 
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேடி தொடராது 
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் 
அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்

ஓ ஓ ஓஒ ...........கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு 
ஓ ஓ ஓஒ ...........ஒரு வாசல் தேடியே விளையாட்டு 
ஓ ஓ ஓஒ ...........கண் திறந்து பார்த்தல் பல கூத்து 
ஓ ஓ ஓஒ ...........கண் மூடிக்கொண்டால் .............ஓ ஓ ஓஒ ...........


போர்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தமில்லை 
காற்றினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை 
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும் 
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும் 
தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை 
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் 
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் 

ஓ ஓ ஓஒ ...........அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே 
ஓ ஓ ஓஒ ...........இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே 
ஓ ஓ ஓஒ ...........மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே 
ஓ ஓ ஓஒ ...........அந்த கடவுளை கண்டால் .........ஓ ஓ ஓஒ ...................

அது எனக்கு எது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு 
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு 
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை 
படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான் 
நல்லவர் யார் அட கெட்டவர் யார் 
கடைசியில் அவனே முடிவு செய்வான் 
பழி போடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே ...
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் 
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம் 

ஓ ஓ ஓஒ ...........பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம் 
ஓ ஓ ஓஒ ...........பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம் 
ஓ ஓ ஓஒ ...........கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம் 
ஓ ஓ ஓஒ ...........மறு பிறவி வேண்டுமா ..........ஓ ஓ ஓஒ ...........

கேட்க .................

original ..............


remix ................


பாடலை பார்க்க ............



திரைபடத்தை பார்க்க ..............




தரவிறக்க ....................

original ......................
click.........
remix....................
click............



வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3