Friday, January 14, 2011

பூங்காற்றே பூங்காற்றே

பூங்காற்றே பூங்காற்றே


பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள் 
போகின்ற வழியெலாம் சந்தோசம் தந்தாள் இவள் 
என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட பாசம் 
இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் பேசும் 
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை 
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை 



பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள் 
போகின்ற வழியெலாம் சந்தோசம் தந்தாள் இவள் 


மஞ்சள் வானம் கொஞ்சம் வேகம் 
கொஞ்சி பேசும் காற்று தொட்டு செல்லுதே 
நிறுத்தாமல் சிரிக்கின்றேன் 
இந்த நிமிடங்கள் புன்னகையை கூட்டிக் கொண்டதே 
கண்ணாடி சரி செய்து பின்னாடி உன் கண்ணை 
பார்கின்றேன் பார்கின்றேன் 
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தை பேசாமல் 
தோற்கின்றேன் தோற்கின்றேன் 
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடி தடமிருக்கும் 
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும் 

பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள் 
போகின்ற வழியெலாம் சந்தோசம் தந்தாள் இவள் 

அழகான நதி பார்த்தால் அதன் பெயரினை கேட்க மனம் துடிக்கும் 
இவள் யாரோ என்ன பேரோ அதை அறிந்திடும் வரையில்  ஒரு மயக்கம் 
ஏதேதோ ஊர் தாண்டி ஏராளம் பேர் தாண்டி 
போகின்றேன் போகின்றேன்
நில் என்று சொல்கின்ற நெடுஞ்சாலை விளக்காக 
அனைகின்றேன் எரிகின்றேன்
மொழி தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே 
வழித்துணையாய் நீ வந்தால் போகும் தூரம் குறைகிறதே 

என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட பாசம் 
இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் பேசும் 
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை 
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை 

பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள் 
போகின்ற வழியெலாம் சந்தோசம் தந்தாள் இவள் 






மறக்காமல் வாக்களித்து செல்லவும் ...........................................................
வாசகர்களுக்கும், பாடகர்களுக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் ................................
உங்கள் 




Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3