Monday, January 10, 2011

வானம் நமதே பூமி நமதே

வானம் நமதே பூமி நமதே

வானம் நமதே பூமி நமதே 
காற்றும் நமதே கடலும் நமதே
ஒளியும் நமதே விழியும் நமதே 
வாழ்வோம் வா வா 

ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு கிழக்கே 
ஒவ்வொரு விழியும் ஒவ்வொரு விளக்கே 
ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு இலக்கே 
வாழ்வோம் வா வா 


போர்களமாய் வாழ்க்கை தான் நம் முன்னே நிற்குதே வா வா 
போரிடவே எழுந்தால் தான் அது பூக்கள் பூக்குதே வா வா 

இது நம்மக்கான காலம்தான் நம்பிக்கை இழக்காதே
இழந்தாலே மீண்டும் தான் கிடைக்காதே வாழ்வோமே வா 

வானம் நமதே பூமி நமதே 
காற்றும் நமதே கடலும் நமதே
ஒளியும் நமதே விழியும் நமதே 
வாழ்வோம் வா வா 

ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு கிழக்கே 
ஒவ்வொரு விழியும் ஒவ்வொரு விளக்கே 
ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு இலக்கே 
வாழ்வோம் வா வா

காலம் யாருக்கும் கை கட்டி நிக்காது 
காலத்தை புறம் தள்ளி நாம் ஓடலாம் 
ஓ ....வாழ்க்கை எப்போதும் எல்லையை காட்டாது 
வாழ்வோடு எல்லையை நாம் தேடலாம் 
வாழ்வில் எப்போதும் ஒத்திகை கிடையாது 
வாழ்க்கை ஒத்திகை போல் தானே வா 
சுற்றும் மண் மேலே சுற்றாமல் நிக்காதே 
சுழற்சி ஒன்றே தான் வாழ்வே வா 
மீண்டும் ஒரு ஜென்மம் மண் மீது இருக்காது 
நாம் இந்த ஜென்மத்தை முழுசாக வாழ்வோமே வா .......

வானம் நமதே பூமி நமதே 
காற்றும் நமதே கடலும் நமதே
ஒளியும் நமதே விழியும் நமதே 
வாழ்வோம் வா வா 

ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு கிழக்கே 
ஒவ்வொரு விழியும் ஒவ்வொரு விளக்கே 
ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு இலக்கே 
வாழ்வோம் வா வா 

வாழ்க்கை பயணத்தில் திடும்மென்று திருப்பங்கள் 
விளையாட்டாய் தலை காட்டும் அதை தாண்டலாம் 
யாரோ நடை போட்ட திசையில் நாம் போகாமல்
நாம் போகும் திசை நாளை வழியாகலாம்
வாழும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் உயர்வாகும் 
எதையும் இழக்காமல் வாழ்வோமே வா 
நித்தம் யுத்தங்கள் நிழல் போல தொடர்ந்தாலும் 
சத்தம் போடாமல் ஜெயிப்போமே வா 
நேற்றுத் தெரியாமல் தொலைந்தேதான் போனாலும் 
இன்றை நாம் இங்கே இழக்காமல் வாழ்வோமே வா.....

வானம் நமதே பூமி நமதே 
காற்றும் நமதே கடலும் நமதே
ஒளியும் நமதே விழியும் நமதே 
வாழ்வோம் வா வா 

ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு கிழக்கே 
ஒவ்வொரு விழியும் ஒவ்வொரு விளக்கே 
ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு இலக்கே 
வாழ்வோம் வா வா 

போர்களமாய் வாழ்க்கை தான் நம் முன்னே நிற்குதே வா வா 
போரிடவே எழுந்தால் தான் அது பூக்கள் பூக்குதே வா வா 

இது நம்மக்கான காலம்தான் நம்பிக்கை இழக்காதே
இழந்தாலே மீண்டும் தான் கிடைக்காதே வாழ்வோமே வா 

வானம் நமதே பூமி நமதே 
காற்றும் நமதே கடலும் நமதே
ஒளியும் நமதே விழியும் நமதே 
வாழ்வோம் வா வா 

ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு கிழக்கே 
ஒவ்வொரு விழியும் ஒவ்வொரு விளக்கே 
ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு இலக்கே 
வாழ்வோம் வா வா 



இப்பாடலை போல் இன்றே வாக்களித்து எம்மை ஊக்கப்படுத்துங்கள் ..
உங்கள்

Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3