Monday, January 10, 2011

காட்டு செடிக்கு காவல்

காட்டு செடிக்கு காவல்

காட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே 
காட்டுக்குள்ள பாடம் படிச்சாச்சே 
ரொம்ப பழைய உலகம் இப்ப புதுசா தெரியுதே 
அடியாத்தி ........இந்த அர்த்தத்துக்கு பேர்றென்ன
அடியாத்தி ..........இது அன்பு தானே வேறென்ன  



காட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே 
காட்டுக்குள்ள பாடம் படிச்சாச்சே

பருத்தி பஞ்சு போல மனசு 
பட்ட தண்ணி போல வயசு 
பாசம் தவிர ஏதும் தெரியாதே 
பொய்கள் இல்லா வேறு உலகம் 
போட்டி இன்றி நெஞ்சம் பழகும் 
வன்முறைக்கு வேளை கிடையாதே
உப்பு மூட்ட ஏறிக்கொண்டு ஊற சுத்தி பார்க்கும் போது 
தப்பு தண்டா ஏதும் இன்றி பயணம் தொடங்குதே 

அடியாத்தி ...........மனம் துள்ளி துள்ளி குதிக்குதே 
சுதியேத்தி ...........தினம் காத்து போல பறக்குதே 

பள்ளி கூடம் பாடம் நமக்கு 
சொல்லிடாத வாழ்க்கை இருக்கு 
அந்த பாடம் இங்கே நடக்கிறதே 
அன்பு ஒன்றே சாமி கணக்கு 
அதுக்கு ஈடு என்ன இருக்கு
கொடுத்து வாங்கும் மனிதம் ஜெயிக்கிறதே 
ஒத்த பருக்கையான போதும் பகிர்த்து உண்ணும் நெஞ்சம்தான் 
காதல் இன்றி காதலோடு மகிழும் மனசு தான் 

அடியாத்தி.............. ரெண்டும் வெக்கப்பட்டு சிரிக்குதே 
சுகமேத்தி ............ மனம் எல்ல தாண்டி பறக்குதே     

காட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே 
காட்டுக்குள்ள பாடம் படிச்சாச்சே 



மறக்காம வாக்களிக்கவும் ....................
சிறிது நேரத்தில் பதினாறு படத்தில் இருந்து மற்றுமொரு பாடல் ..................
உங்கள்
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3