Saturday, January 1, 2011

நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்

ஆண் :- நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்  
       நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் 
       நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன் 
       நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்  

ஆண் :- நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் 

பெண் :- நீ அலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன் 
ஆண் :- நீ உடல் நான் இதழ் நீ விட வேண்டாம் நான் விடுவேன் 
பெண் :- நீ கிளை நான் இலை உன்னை ஓட்டும் வரைக்கும்தான் உயிர் 
         தரிப்பேன் 
ஆண் :- நீ விழி நான் இமை உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
பெண் :- நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர் தொட
         அனுமதிப்பேன் 


ஆண் :- நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்


ஆண் :- நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய் கலந்திருப்பேன் 
பெண் :- நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் போதே வெளிப்படுவேன் 
ஆண் :- நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்து நான் இசைப்பேன் 
பெண் :- நீ உடை நான் இடை உன்னை உறங்கும் பொழுதும் நான்     
         உடுத்திருப்பேன் 
ஆண் :- நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன் 


பெண் :- நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் 
ஆண் :- நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன் 
பெண் :- நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன் 


ஆண் :- நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்  





மறக்காமல் வாக்களித்து செல்லவும் ..................
                உங்கள்   
     
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3