Friday, December 31, 2010

இருபது கோடி நிலவுகள்

இருபது கோடி நிலவுகள்

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ 
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ  
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ 
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ  குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ 
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ 
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே 
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே


இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ 
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ  

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன 
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ 
தேன் மிதக்கும் உதடு சேர்திருப்பதென்ன 
ஒன்றை ஒன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளவோ 
மானிடப்பிறவி  என்னடி மதிப்பு  
உன் கால் விரல் நகமாய் இருப்பதில் சிறப்பு 
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே 
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே ஓ .......

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ 
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ  

ஜூலை மாதம் பூக்கும் கொன்றை பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே  
தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே 
மேனி கொண்ட கன்னம் மின்னும் வண்ணம் கூடுதே 
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை 
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை 
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே 
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே ஓ ....... 

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ 
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ  
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ 
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ 
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே 
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே ஹே ஹே  ..........







மறக்காமல் வாக்களிக்கவும்................................
                                   உங்கள் 
      
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3