Monday, December 13, 2010

பேசா மடந்தையே

பேசா மடந்தையே 


பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே 
சேலை குழந்தையே என் செல்ல கலவரமே 
இதயம் என்னும் பூ பறித்தேன் 
நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன் 
கையில் கொடுத்தேன் கண்ணே 
நீ காலில் மிதித்தாய் பெண்ணே



பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே 
சேலை குழந்தையே என் செல்ல கலவரமே 


ஏழு நிறங்களை எண்ணி முடிக்கு முன் 
வானவில் கரைந்தது பாதியிலே 
மறுபடி தோன்றுமா பார்வையிலே 
பெண்ணின் மனநிலை கண்டு தெளியு முன் 
வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே 
வானம் நடுங்குது மயக்கத்திலே 
காதலை சொல்லி கரம் குவித்தேன் 
கற்புக்கு பழி என்று கலங்குகிறாய் 
பூஜைக்கு உனக்கு பூ பறித்தேன் 
பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய் 
வார்த்தைகளால் காதலித்தேன் 
ஜாடைகளால் சாகடித்தாய் 
மழை தான் கேட்டேன் பெண்ணே 
இடி மின்னல் தந்தாய் கண்ணே 


பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே 


முங்கில் காட்டிலே தீயும் அழகுதான் 
ஆனால் அதை நான் ரசிக்கவில்லை 
ஐயோ  இதயம் பொறுக்கவில்லை 
கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான் 
ஆனால் அதை நான் சுகிக்கவில்லை
சகியே என் மனனம் சகிக்கவில்லை 
உன் சினம் கண்டு என் இதயம் 
உடம்புக்கு வெளியே துடிக்குதடி 
உன் மனனம் இரண்டாய் உடைந்ததென்று 
என் மனனம் நான்காய் உடைந்ததடி  
விதை உடைந்தால் செடி முளைக்கும் 
மனம் உடைந்தால் புல் முளைக்கும் 
தண்டனை என்பது எளிது 
உன் மௌனம் வாளிலும் கொடிது 



பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே 
சேலை குழந்தையே என் செல்ல கலவரமே 








 MySpacePlaza.com
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3