Sunday, December 26, 2010

ஆகாயம் இத்தனை நாள்

ஆகாயம் இத்தனை நாள்

ஆகாயம் இத்தனை நாள் மண் மீது வீழாமல் 
தூணாக தாங்குவது காதல்தான் 

ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூ பூக்க
அழகான காரணமே காதல்தான் 
பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமை 
நாட்கள் ஏழும் காதலின் கிழமை 
ஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும் 
மரம் ஏற ஏணியை தந்தால் மலையில் ஏறி கொடியேற்றும் 
குண்டூசி கையில் தந்தால் கிணறே தோண்டி விடும் 
வெறும் கல்லை வைர கல்லாய் காதல் பார்வை மாற்றி விடும்
வெந்நீரில் விட்டாள் கூட காதல் மீன் நீந்தும் 


கஷ்டம் காதலுக்கு இஷ்டம் வெற்றி பெற வேண்டும் என்றால் 
காதல் எதையும் தாங்கிடுமே
முட்டும் கதவுகளை தட்டும் சறுக்கி விழும் பாதை எல்லாம் 
வெற்றிப்படியாய் மாற்றிடுமே 
அண்ணார்ந்து பார்க்காமல் விண்மீனை வீழ்த்திவிடும் 
துணை யாரும் இல்லாமல் ஜெயித்திடுமே 
இது நெருப்பில் செய்த இரும்பு வளையமே 
இருமனம் விரும்பி துணிந்து உடையுமே 
பயங்களும் தயக்கமும் விடுமுறை எடுத்திடுமே 
வேரோடு வேர்வை ஊற்றி காதல் என்றும் வென்று விடும் 
வெறியோடு ஓடும் போது தடையை உடைத்துவிடும் 
கடல் நீரை தேக்கும் போது உப்பாய் தானே மாறிவிடும் 
கண்ணீரை தேக்கும் காதல் முத்தாய் மாற்றிவிடும் 


காதல் கேட்டு கொண்டு வருமா ?
தோட்டத்துக்குள் பறவை வந்தால் வேலி என்ன தடுத்திடுமா ?
காதல் காட்டு செடி போலே கட்டளைகள் போடும் போதும் 
பூக்கள் பூக்க மறுத்திடுமா ?
புலி வாழும் குகையுள்ளே கிளி வாழும் வீரத்தை
மனமோடு தந்திடுமே காதல் தான் 
இது போகும் வழியோ வெற்றுப்பாதை 
திரும்பும் வழியோ வெற்றிப்பாதை
விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணம் இது 
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது 
ஆனாலும், கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது 
மலையேறும் எறும்பின் கால்கள் வெயிலை மிதித்து உடையாது 
மனதோடு காதல் வந்தால் மனிதா தடையேது ?




Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3